Mnadu News

திமுக ஆட்சிக்கு கள்ளச்சாராய பலிகளே சாட்சி: அண்ணாமலை காட்டம்.

தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை வெளியிடடுள்ள அறிக்கையில், மது விலக்கு அமைச்சகத்தின் கொள்கை அறிக்கை படி, கடந்த 14 ஆண்டுகளில் கள்ளச்சாராய பலிகள் ஏற்படவில்லை. மீண்டும் திமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்திருப்பது ஆட்சியாளர்களின் திறமையின்மையை காட்டுகிறது. கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். திமுக அரசின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு கள்ளச்சாராய பலிகளே சாட்சி. தமிழக அரசு தூக்கத்திலிருந்து விழித்து, கள்ளச் சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends