Mnadu News

திமுக எம்பிக்களின் கீழ்மை கருத்துகளே காரணம்: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம்.

தமிழக பா.ஜ.தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், வட மாநிலத்தவர்கள் பற்றி திமுகவின் எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துகள், அவர்களை பானி பூரி வாலா என்று திமுக அமைச்சர் அழைத்தது மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் வட மாநிலத்தவர்களை வெளியேற்றக் கோருவதும் தான் இன்றைய இந்த நிலைக்கு காரணம்.தமிழகத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தி பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழக மக்களாகிய நாங்கள் உலகம் ஒன்று என்ற கருத்தை நம்புகிறவர்கள். நம் வட மாநில நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும் வெறுப்பையும் ஆதரிக்கவில்லை. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன் ஆகியவை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வாறு தங்கள் தொழில் சார்ந்த அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளனர் என்பது குறித்தும், மற்றும் அவர்களின் நலனை உறுதிப்படுத்த அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசுடன் பா.ஜ.க, துணை நிற்கிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழகம் உறுதுணையாக இருந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends