மேற்கு வங்காள மாநிலத்தில் சிஏஏ, என்ஆர்சி மற்றும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ரம்ஜான் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, குடியுரிமை (திருத்தம்) சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். நாம் ஒற்றுமையாக வாழ்ந்தால், யாரும் எங்களுக்கு தீங்கு விளைவிக்க முடியாது. தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸின் போராட்டம் பாஜகவுக்கு எதிரானது. இந்தியா கூட்டணி பற்றி நாங்கள் பின்னர் முடிவு செய்வோம். ஆனால் வங்காளத்தில், தயவு செய்து வேறு எந்த கட்சிக்கும் வாக்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More