திரிபுராவில் 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த ஜன.21-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், ஜன.30-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.அந்த மாநிலத்தில் பாஜகவைத் தோற்கடிக்கும் நோக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் கைகோத்துள்ளன. இக்கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இணையுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தேர்தலில் 60 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது.இந்த நிலையில் பேரவைத் தேர்தலுக்கான 22 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. இதனிடையே திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பிப்ரவரி 6-ஆம் தேதி திரிபுராவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More