திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள குமார்காட் கிராம ஜெகந்நாதர் கோயிலில் கடந்த 10 நாட்களாக தேர்த் திருவிழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேர் நிலைக்குத் திரும்பும் விழா நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது மேல்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் தேரை வடம்பிடித்து இழுத்த மூன்று குழந்தைகள், 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன்; 16 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில முதல் அமைச்சர் மாணிக் சாஹா,இந்த விபத்து குறித்து உனாகோட்டி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More