திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. திரிபுராவில் 90 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் டவுன் போர்டோவாலி தொகுதியில் வாக்கு எண்ணும் பணி முடிந்த நிலையில்,பாஜக சார்பில் போட்டியிட்ட திரிபுரா மாநில முதல் அமைச்சர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

சிற்றுந்து, பெண்களுக்கான கிளினிக்குகள் :டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு.
டெல்லி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான 78 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான...
Read More