Mnadu News

திரிஷா 68! வேல்ஸ் தயாரிப்பில் இயக்கும் இயக்குநர் யார் தெரியுமா?

பொன்னியின் செல்வன் வெற்றி:

மணி ரத்தினம் இயக்கத்தில் ரஹ்மான் இசையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அனைத்து பாகங்களும் வசூலை வேட்டை நடத்தி இமாலய வெற்றியை பதிவு செய்த நிலையில், இதில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இந்த படம் ஒரு பெரும் திருப்புமுனை படமாக அமைந்தது. குறிப்பாக, கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா போன்றவர்களுக்கு இது அவர்களின் இன்னொரு புதிய பக்கத்தை திறந்து வைத்துள்ளது.

திரிஷாவுக்கு குவியும் பட வாய்ப்புகள் :

பொன்னியின் செல்வன் கொடுத்த வெற்றி திரிஷாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை கொடுத்து வருதிறது. அதன்படி, தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து விஜய் 68 படத்திலும் நடிக்க அவரிடம் talks நடந்து வருகிறது. இதற்காக ₹8 கோடிகள் வர சம்பளமாக தர படக்குழு தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை தவிர திரிஷாவை லீட் ரோலில் வைத்து இயக்க பலர் கதை கூறி வருகின்றனர்.

திரிஷா 68 :

தூங்காநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் இயக்குநர் கவுரவ். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானவர். அதன் பிறகு இப்படை வெல்லும் என்கிற படத்தை எடுத்தார், ஆனால் அது படு தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். இடையில், நடிகை திரிஷாவுக்கு கதை கூறி உள்ளாராம். இந்த கதையை திரிஷா ஓகே செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends