Mnadu News

திருச்சி மாவட்டம் :பொத்தமேட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலய திடலில், மாபெரும் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது.கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்டுள்ளது. 700-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணும் விழாவினை வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், நகர்மன்ற தலைவர் கீதா ஆ.மைக்கேல்ராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளனர்.

Share this post with your friends