திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருகிற 11-ஆம் தேதியில் இருந்து 20- ஆம் தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது. அதையொட்டி முதலில் கோவிலில் அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 11- ஆம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் மீன லக்னத்தில் நடக்கிறது. அன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது. 12-ந்தேதி காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபா வாகன வீதிஉலா, 13-ந்தேதி காலை பூத வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 14-ந்தேதி காலை மகர வாகன வீதிஉலா, இரவு சேஷ வாகன வீதிஉலா, 15-ந்தேதி காலை திருச்சி உற்சவம், இரவு அதிகார நந்தி வாகன வீதிஉலா. 16-ந்தேதி காலை வியாக்ர வாகன வீதிஉலா, இரவு கஜ வாகன வீதிஉலா, 17-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு குதிரை வாகன வீதிஉலா, 18-ந்தேதி காலை தேரோட்டம் (போகி தேர்), இரவு நந்தி வாகன வீதிஉலா, 19-ந்தேதி காலை புருஷா மிருக வாகன வீதிஉலா, மாலை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், இரவு திருச்சி உற்சவம், 20-ந்தேதி காலை சூரிய பிரபா வாகன வீதிஉலா, திரிசூல ஸ்நானம், இரவு கொடி இறங்குதல், ராவணாசூர வாகன வீதிஉலா நடக்கிறது.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More