Mnadu News

திருமணத்தின் போது வரதட்சணை கேட்ட மணமகன்: மரத்தில் கட்டி வைத்த மணமகள் வீட்டார்.

உத்தரப்பிரதேசம் பிரதாப்கரில் அமர்ஜித் வர்மா என்பவருக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டு தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. திருமண விழாவில் மாலை மாற்றிக்கொள்ளும் ஜெய் மாலா என்ற சடங்கின்போது, அமர்ஜித்தின் நண்பர்கள் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.இதனால், மணமகன்-மணமகளின் குடும்பத்தினருக்கிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது மணமகன் அமர்ஜித் வர்மா, மணமகளின் குடும்பத்தினரிடம் வரதட்சணைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.அதையடுத்து,இரு வீட்டாரும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், தங்களிடம் வரதட்சணைக் கேட்ட மணமகனைச் சிறைப்பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். இது குறித்து தகவலறிந்த மந்தடா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, மணமகனை விடுவித்து அவரைக் கைதுசெய்தனர்.

Share this post with your friends