Mnadu News

‘திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றம் ஆகாது’: கர்நாடகா உயர் நீதிமன்றம் உத்தரவு.

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் 28 வயதான பிரஜித்துக்கு, திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகினர். திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்தார். வெளிநாட்டில் வேலை கிடைத்ததும், பெண்ணுடன் இருந்த உறவை பிரஜித் துண்டித்தார்.பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில், பிரஜித் மீது போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிரஜித் மனு செய்தார்.இந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்து பிறப்பித்துள்ள உத்தரவில்,மனுதாரர் மீது புகார் கொடுத்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. கணவரை அவர் விவாகரத்து செய்யவில்லை. விவாகரத்து செய்யாமல், இன்னொரு நபரை திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணை ஏமாற்றுவது குற்றம் ஆகாது. இதனால், மனுதாரர் மீது பதிவான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. எ;னறு உத்தரவில் தெரிவிக்கப்படடுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More