Mnadu News

திருமலையில் புதிய முயற்சி: ஒரே நாளில் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்படுவது வழக்கம். ஒரு மணிநேரத்தில் 5 ஆயிரத்து 500 பேர் என்ற அடிப்படையில், 80 ஆயிரம் பக்தர்கள் தினமும் வழிபட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில், கோவிலுக்குள் உள்ள வெள்ளிவாசலில் இருந்து ஒரே வரிசையாக பக்தர்களை கருவறைக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ஒரு மணி நேரத்தில் 6 ஆயிரத்து 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் என, ஒரே நாளில் 92 ஆயிரத்து 238 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனிடையே, ஒரேநாளில் 4 கோடியே 2 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.

Share this post with your friends

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...

Read More