கடந்த மாதம் 12 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, போளூர், கலசப்பாக்கத்தில் 4 ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து மர்ம கும்பல் ரூ.80 லட்சத்தைத் திருடிச் சென்றது. திருட்டு நடைபெற்ற 3 தேசிய வங்கி ஏடிஎம் மையங்களிலும் இயந்திரத்தை உடைத்த போது, அபாய மணி ஒலிக்காதது ஏன்? என்பது குறித்து அந்த வங்கியின் தொழில்நுட்ப அலுவலர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். ,தகவலறிந்த வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, காவல் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன் (திருவண்ணாமலை), ராஜேஷ் கண்ணா (வேலூர்), கிரண் ஸ்ருதி (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்) மற்றும் போலீஸார் திருவண்ணாமலைக்கு வந்தனர். இவர்கள் திருட்டு நடைபெற்ற 4 ஏடிஎம் மையங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த தொடர் திருட்டில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 8 தனிப் படைகளை அமைத்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவிட்டார். ஆவர்கள் வாகனத் தணிக்கை, கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, இந்தச் சம்பவங்களில் வட மாநில நபர்கள் ஈடுபட்டிருக்கலாம்; குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர் என்று வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கூறினார்.இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை வழக்கில், ஹரியாணாவை சேர்ந்த ஹரிப், ஆசாத், பாஷா, அப்சர் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான நிஜாமுதீனை சென்னையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...
Read More