Mnadu News

திருவாரூரில் வரும் 22 ஆம் தேதி வரை ட்ரோன் பறக்கத் தடை.

சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் செல்லும் முதல் அமைச்சர் ஸ்டாலின், மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் வரும் 22ஆம் தேதி பங்கேற்கிறார்.தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் அமைக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், முதல் அமைச்சர் வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends