திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட விஜயபுரம் பகுதியில் அரசு தாய் சேய் மருத்துவமனை உள்ளது. இந்த நிலையில் திருவாரூரில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மழை நீர் அங்குள்ள மருத்துவமனைக்குள் புகுந்துள்ளது. இதனால் கர்ப்பிணி பெண்கள் அவதி கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீரில் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் இருள் சூழ்ந்து காணப்படுவதால், கை குழந்தையுடன் சிலர் வெளிச்சத்தை தேடி வெளியில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் திருவாரூர் ரயில்வே கீழ்பாலம் முழுவதுமாக மழை நீரால் மூழ்கியதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.