தனுஷ் திரை வாழ்வில் கமர்ஷியல் மற்றும் குடும்ப ரசிகர்களை கவர்ந்த படம் என்றால் அது “திருவிளையாடல் ஆரம்பம்”. 2006 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 100 நாட்கள் ஓடி நல்ல வசூலை மற்றும் பெயரை தனுஷுக்கு பெற்று தந்தது.
பூபதி பாண்டியன் இயக்கத்தில், தனுஷ், ஷ்ரேயா, மௌலி, பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தனர்.
அதோடு, டி இமான் இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி படத்துக்கு பெரும் பலம் சேர்த்தன.
இன்றோடு 16 வருடங்களை இப்படம் கடந்தாலும் இன்றும் தனியார் சேனல்களில் இப்படத்தை ஒளிபரப்பினால் பலர் இப்படத்தை விரும்பி பார்ப்பது உண்டு. தனுஷ் திரை வாழ்வில் ஒரு சில படங்களே அவருக்கு லாபத்தோடு பெயரையும் பெற்று தந்து உள்ளன. அந்த வரிசையில் “திருவிளையாடல் ஆரம்பம்” படத்தை சேர்க்கலாம்.