திறந்த அணுகல் மூலம் மின்சாரம் பெற சென்னை மெட்ரோ – என்.எல்.சி. இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின் மூலம் சென்னை மெட்ரோ பசுமை மின்சாரத்துக்கான அணுகலை என்.எல்.சி. வழங்கும்.இந்த முயற்சியானது சென்னை மேட்ரோ ரயில் நிறுவனம் அதன் மின் கொள்முதல் செலவை மேம்படுத்த உதவுவதோடு மசுமை மூலமான மின்சாரத்துக்கான அணுகலையும் வழங்கும். இந்திய பவர் எக்ஸ்சேஞ்ச் மூலம் மின்சாரம் பெறப்படவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, என்.எல்.சி. பொதுமேலாளர் பி.வாசுகி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More