வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் அதாவது 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது முதலே எதிர்பார்ப்பும் பிரச்சனைகளும் அணிவகுத்து வருகின்றன.

ஒரு பக்கம் துணிவு பட வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூன்று மாதங்களுக்கு முன்பே வாங்கி விட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் ஒன்றில் கூறி இருந்தார்.

இன்னொரு பக்கம், வம்சியும் ஒரு பக்கா தமிழ் படம் என கூறியதால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் ஆந்திரா கர்நாடகாவில் அதிக திரை அரங்குகளை தர மறுப்பு தெரிவித்து, ஒரு வழியாக அந்த பிரச்சனையும் முடிவுக்கு வந்தது.

இது எல்லாம் முடிந்து வாரிசு தமிழ்நாடு ஆந்திராவில் பல திரை அரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது தில் ராஜுவின் சர்ச்சை பேட்டி வாரிசு ரீலீஸ் ஆகுமா ஆகாதா என்ற கேள்வியை கிளப்பி உள்ளது.

தெலுங்கு தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ “விஜய் தான் தமிழ்நாட்டில் நம்பர் ஒன் என்றும் அஜித் அதன் பிறகு தான் என்றும் கூறி உள்ளார்”. மேலும், நம்பர் ஒன் நடிகரான விஜய் படத்துக்கே அதிக திரை அரங்குகள் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை நாடி உள்ளார். இது அஜித் ரசிகர்களை மிகவும் கொதிப்படைய வைத்துள்ளது.

என்ன தான் நடக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.