Mnadu News

தி கேரளா ஸ்டோரி’க்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த அரவிந்தாக்ஷன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “சன்ஷைன் சினிமா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’திரைப்படத்தை வெளியிட முழுமையான தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், “ஏற்கெனவே இந்தப் பட விவகாரம் தொடர்பாக கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த திரைப்படத்துக்கு தமிழக அரசு ஆதரவோ, எதிர்ப்போ இல்லை” என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி” செய்து உத்தரவிட்டனர்.

Share this post with your friends