தமிழ்நாடு, மேற்குவங்கத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தயாரிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், ‘நாடு முழுவதும் படம் திரையிடப்படுகிறது. மேற்குவங்க அரசு ஏன் படத்தைத் தடை செய்ய வேண்டும், படம் திரையிடப்படுவதை ஏன் தடுக்க வேண்டும்? அனைத்து வகையான மக்கள் உள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் நன்மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது நல்லதாகவும் இருக்கலாம் அல்லது கெட்டதாகவும் இருக்கலாம்’ என்று நீதிபதிகள் கூறிய நிலையில், தடை செய்ததற்காக விளக்கம் கேட்டு இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More