Mnadu News

‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு அரசு தடை விதிக்கவில்லை: உச்சநீதிமன்றம்; தமிழ்நாடு அரசு தகவல்.

தி கேரளாஸ்டோரி படம் தொடர்பாக பத்திரிகையாளர் குர்பான் அலி சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கவில்லை என்றும், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம், அறிமுகம் இல்லாதவர்களின் நடிப்பு, போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால், திரையரங்கு உரிமையாளர்களே 7ஆம் தேதி தொடங்கி திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends