சுதிப்தோ சென் இயக்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே நேரம்,; கேரள உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தியது.அதன்படி இந்த மனு கேரள உயர்நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தணிக்கை குழு, படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் அளித்துள்ளது.இந்தப் படம் கற்பனையே தவிர வரலாறு அல்ல என்றும், கேரளத்தைப் போன்ற மதச்சார்பற்ற சமூகம் இந்த படத்தை ஏற்றுக் கொள்ளும். அதோடு, இதில் இஸ்லாமுக்கு எதிராக எதுவும் இல்லை, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு எதிராகத்தான் இருக்கிறது’ என்று கூறி படத்திற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து உத்தரவிட்டுள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More