Mnadu News

தி கேரளா ஸ்டோரி மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்ப்படம் வருகிற 5-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு விசாரணைக்கு வந்த போது, வெறுப்பை தூண்டும் வகையில் திரைப்படம் உள்ளதால், வெறுப்பு பேச்சு தொடர்பான மனுக்களோடு இணைத்து விசாரிக்க மனுதாரர் முறையீடு செய்தார்.ஆனால், படம் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளதால் முதலில் உயர் நீதிமன்றத்தை அணுக நீதிபதி கே.எம். ஜோஸப் அறிவுறுத்தியுள்ளார். அதோடு, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுதத நீதிபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடவும் மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Share this post with your friends