கர்நாடகா மாநிலத்தில் வரும், 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், மண்டலம் வாரியாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர. இந்நிலையில்,விஜயநகரா மாவட்டத்தில் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தப் பிறகு, நிகழ்ச்சிகளில் பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ”காங்கிரஸ் தனது துவக்க காலம் முதலே தீவிரவாதிகளைச் சமாதானப்படுத்தி வருகிறார்கள். தீவிரவாதிகள் இறந்தால் காங்கிரஸ் தலைவர்கள் அழுகிறார்கள். காங்கிரஸின் வரலாறு சமூகவிரோத சக்திகளின் பக்கம் சாய்வதும், பயங்கரவாதம் மற்றும் தேசப்பாதுகாப்புக்கு ஆபத்து வரும்போது மௌவுனமாக இருப்பதும்தான் என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More