அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் படம் தான் “துணிவு”. ஜிப்ரான் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு இப்படம் உலகமெங்கும் வெளியாக உள்ளது.

தற்பொழுது, ஷூட்டிங் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் துவங்கி உள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டு ஹெச் வினோத் உறுதி செய்துள்ளார்.

வரும் மாதங்களில் துணிவு படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் டிசம்பர் மாதம் முதல் அஜித் அடுத்த படத்தின் பணிகளில் பிசியாகி விடுவார் என சொல்லப்படுகிறது.
