Mnadu News

துணிவு படக்குழு தந்துள்ள இரண்டு மாஸ் அப்டேட்ஸ்!

ஹெச் வினோத்- போனி கபூர் – தல கூட்டணியில் உருவாகி வருகிறது “துணிவு”. படம் ஆரம்பம் ஆனது முதலே மிகுந்த எதிர்பார்ப்பை இப்படம் சுமந்து வருகிறது. 2023 பொங்கல் வெளியீடாக ரெட் ஜெயன்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

இப்படத்தின் அப்டேட்ஸ் கேட்டு ரசிகர்கள் நச்சரித்து வரும் நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் சிங்கிள் அடுத்த மாதம் வெளியாகும் என்றும். டிரெய்லரை புத்தாண்டு அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போன்று அடுத்த மாதம் முதல் இப்படத்தின் புரொமோஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிப்ரான் இசையில் இரண்டு மாஸ் பாடல்கள் அடுத்த மாதம் வெளியாவது, உடனே டிரெய்லர் என்ற தகவலை கேட்ட அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கி உள்ளனர்.

Share this post with your friends