Mnadu News

துணிவு பிரீ பிசினஸ் நிலவரம்! போனி கபூருக்கு அதிர்ஷ்டம்! எவ்வளவு லாபம் தெரியுமா?

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ளது “துணிவு”. பொங்கலுக்கு இப்படம் வெலியாக உள்ள நிலையில் படத்தின் பிரீ பிசினஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

துணிவு படத்தின் மொத்த பட்ஜெட் ₹160 கோடிகள் இதில் அஜித்துக்கு சம்பளம் ₹70 கோடி என்றும், அதில் தயாரிப்பாளருக்கு எல்லா ஏரியாக்களில் விற்ற லாபம் ₹33.60 கோடிகள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே துணிவு படத்தின் மூன்று பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பின் அளவை உயர்த்தி உள்ள நிலையில், இப்படம் வெளியானால் நிச்சயம் ₹300 கோடிகளுக்கு குறையாமல் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல அஜித் தமது 62 படத்துக்காக ₹105 கோடிகளை சம்பளமாக வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends