Mnadu News

துருக்கியில் மே 28-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல்.

69 வயதாகும் தய்யீப் எர்டோகன் துருக்கியின் அதிபராக ஆட்சி செய்து வருகிறார்.இந்த நிலையில், துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49 புள்ளி 6சதவீத வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44 புள்ளி ஏழுசதவீத வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5புள்ளி இரண்டு சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். துருக்கியின் அரசியல் வழக்கம்படி தேர்தலில் 50 சதவீத வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மை. அந்த வகையில் பூஜ்ஜியம் புள்ளி நான்கு சதவீத வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் மே 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Share this post with your friends