நடிகர் விக்ரம்:
சரியான இயக்குனர்களை தேர்வு செய்து வெவ்வேறு கதைகளை கையில் எடுத்து அதில் தமது முழு உழைப்பையும் கொட்டி நடிப்பவர் விக்ரம். என்ன தான் கோப்ரா படம் தோல்வியை தழுவி இருந்தாலும், இவரின் அபார உழைப்பு மற்றும் மெனக் கெடல் பேசப்பட்டது.

பொன்னியின் செல்வன் வெற்றியும் தங்கலான் படமும் :
மணி ரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் ரோலில் நடித்து அசத்தி இருந்தார். இந்த படம் இவருக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்து உள்ளது. இதை தொடர்ந்து பா. ரஞ்சித் உடன் கூட்டணி அமைத்து வேறு ஒரு களத்தில் பயணித்து வருகிறார். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை பேசும் படமாக தங்கலான் உருவாகி வருகிறது.

துருவ நட்சத்திரம் எப்போது :
2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படத்தின் பணிகள் தற்போது வரை இழுத்து கொண்டே செல்கிறது. ஆம், எப்போதோ வெளியாக இருக்க வேண்டிய படம் இன்னும் கிடப்பில் உள்ளது. கௌதம் மேனன் ரசிகர்கள் பலரும் இப்படம் பற்றி கேட்டு வந்த நிலையில், தற்போது ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவல் கிடைத்து உள்ளது.

அதன்படி, படத்தை ஜூலை 14 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில், விக்ரம் மற்றும் கெளதம் மேனன் இடையே எவ்வளவோ பிரச்சனைகள் இருந்து வந்ததாக கிசுகிசுக்கள் பரவி வந்தது குறிப்பிடதக்கது.