Mnadu News

தூத்துக்குடியில் திரையரங்க உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய திரையரங்கில் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் உள்ளிட்ட எட்டு பேர் மது அருந்திவிட்டு சினிமா பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது திரையரங்க உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திரையரங்கில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அன்பழகன் உள்ளிட்ட எட்டு பேர் பயங்கர ஆயுதங்களுடன் சென்று கொலை மிரட்டல் விடுத்து அவதூறாக பேசியுள்ளனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர். தற்போது இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More