தென்காசி நகராட்சி பகுதிகளில் நேற்று சபா கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விடுபட்ட பகுதிகளில் இன்று நடைபெற்றது. 27-வது வார்டு பகுதியில் நடைபெற்ற சபா கூட்டத்தில், நகர்மன்ற தலைவர் சாதிர், 27 – வது வார்டு உறுப்பினர் காதர் முகைதீன், நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான வாறுகால், சாலை, தெருவிளக்கு, குப்பைகளை சேகரிப்பதில் உள்ள தாமதங்கள் போன்றவற்றை தெரிவித்தனர். சபா கூட்டத்திற்குள் பொது மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொது மக்கள் நெகிழி பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் குப்பைகளை வீதிகளில் கொட்டுவதை தவிர்ப்பதற்காக அனைத்து வீடுகளுக்கும் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை பிரித்து வழங்குவதற்கு குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More