Mnadu News

தென்காசியில் பிரபலமான புரோட்டாக் கடை குடோனுக்கு சீல்.

தென்காசியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான புரோட்டாக் கடைக்குச் சொந்தமான குடோனுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் புரோட்டக் கடை உலகப் புகழ்பெற்றது. குற்றாலம் அருவியில் குளித்து மகிழ வரும் அசைவப் பிரியர்கள் அடுத்து நாடுவது பிரானூரில் செயல்பட்டு வரும் இந்த புரோட்டக் கடையைத்தான்.இந்த நிலையில், பிரானூரில் இயங்கி வரும் புரோட்டாக் கடையில் கலப்பட மற்றும் கெட்டுப்போன உணவுகளைக் கொண்டு சமைக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன்.இது குறித்து சோதனை செய்ய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இன்று சமையல் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் குடோனுக்குச் சென்றனர். ஆனால், குடோனை சோதனை செய்வதுற்கு உரிமையாளர் அனுமதி மறுத்து, குடோனை திறக்கமுடியாது என்று கூறிவிட்டதால், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்துள்ளனர்.

Share this post with your friends