தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான கேங்வோனில் நேற்று பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு 4 பேருந்துகள் புறப்பட்டு உள்ளன. இதில் ஒரு பேருந்து ஹாங்சியோன் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்து மீது அதிவேகமாக மோதியது.

இதனையடுத்து அதன் பின்னால் வந்த 3 லாரிகள் மற்றும் ஒரு கார் அதன் மீது ஒன்றன்பின் ஒன்றாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் இருந்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பயத்தில் அலறி உள்ளனர். தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பெரும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.