இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்த 4 மாதங்களில் பெய்யும் மழையை இந்திய விவசாயிகள் பிரதானமாக நம்பி இருக்கின்றனர். அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்தமான் கடலில் மே 20ம் தேதி தொடங்கும் பருவமழை பின்னர் கேரளாவை வந்தடையும் என்றும் ஜூன், ஜூலை மாதங்களில் கேரளாவில் பருவமழை அதிகளவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம்,பருவகாலத்தின் 2வது பாதியில் மேகவெடிப்பு எனப்படும் எல் நினோவின் தாக்கம் காரணமாக மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More