வடகிழக்கு பருவமழை தீவிரத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் நகரில் தூர்ந்துபோன வாய்க்கால், கால்வாய் மற்றும் சேரும் சகதியுமாய் மாறிப்போன தெருச்சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து அனிச்சம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் கோலியனூரான் வாய்க்கால் சீரமைப்புப் பணி, திரு.வி.க வீதியில் நடைபெற்று வரும் கால்வாய் சீரமைப்புப் பணி, சுதாகர் நகரில் நடைபெற்று வரும் கால்வாய் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More