ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானா மாநில அரசுக்கு எதிராக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று அவரது உண்ணாவிரத போராட்டத்தை தடுத்து நிறுத்திய போலீஸார், சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தெலங்கானா மாநிலம் முழுவதும் நடைப்பயணத்தை தொடர்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் {ஹசைன் சாகர் ஏரி பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதாக அவர் அறிவித்தார். அங்கு அவருக்கு அனுமதி வழங்கப்படாததையடுத்து ஹைதராபாதில் உள்ள அவரது கட்சியின் தலைமையகத்தில் உண்ணாவிரதத்தை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கினார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில் அப்பகுதியில் கூடியிருந்த கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், செய்தியாளர்களை வெளியேற்றிய போலீஸார், ஷர்மிளாவைக் கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
உண்ணாவிரதத்தின்போது, தண்ணீர்கூட அருந்தாததால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு நீரிழப்பு ஏற்பட்டதாகவும் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரையின் அளவு எச்சரிக்கைக்குரிய அளவுக்கு குறைந்துவிட்டதாகவும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்ததாக அவரது கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர் சிகிச்சையின் காரணமாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து ஷர்மிளா இன்று தனியார் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More