Mnadu News

தெலங்கானா முதல் அமைச்சர் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்.

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அமித் அரோராவிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் கவிதாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.இதுதொடர்பாக வியாழக்கிழமை(மார்ச் 9) நேரில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க கோரி கவிதாவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக கவிதாவிடம் கடந்தாண்டு சிபிஐ காவல்துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends