தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சரத்பவார், கட்சித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். புதிய தலைவரை தேர்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்தார்.இதனிடையே, புதிய தலைவரை தேர்வு செய்ய சரத்பவார் நியமித்த புதியக்குழு கூட உள்ள நிலையில்,தேசியவாத காங்கிரசின் புதிய தலைவராக, சரத்பவாரின் மகளும், எம்.பி.,யுமான சுப்ரியா சுலே தேர்வு செய்யப்படுவார் எனக்கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சி தொடர்ந்து அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.அதோடு, மஹாராஷ்டிர மாநில முதல் அமைச்சர் வேட்பாளராக அஜித்பவார் இருப்பார் எனவும் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More