மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 2021-ஆம் ஆண்டு மராட்டியத்தின் மும்பை நகரில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார்.இதையடுத்து நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கும்போது, அவர் முதலில் அமர்ந்து இருந்தும், அதன்பின் எழுந்து சென்று தேசிய கீதம் முழுமையாக இசைக்கப்படுவதற்கு முன் அதனை பாதியிலேயே நிறுத்தும்படி கூறி சென்றுவிட்டார்.இது குறித்து, மும்பை பா.ஜ.க. செயலாளர் விவேகானந்த் குப்தா, மும்பை போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரை ரத்து செய்யும்படி மும்பை உயர்நீதிமன்றத்தில்; மம்தா பானர்ஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதி அமித் போர்கார் தலைமையிலான ஒரு நபர் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. இதனால், மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More