நடிகை குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 2014-இல் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். பின்னர், காங்கிரஸிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தார்.2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அனைத்து இடங்களிலும் நடக்கின்றன. தற்போது அதிகமாக இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க என்னால் என்ன செய்ய முடியுமோ கண்டிப்பாக செய்வேன். தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பதால் தமிழ்நாட்டுப் பெண்களின் பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன்’ என்று கூறியுள்ளார்.

சிற்றுந்து, பெண்களுக்கான கிளினிக்குகள் :டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு.
டெல்லி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான 78 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான...
Read More