Mnadu News

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் குஷ்பு நியமனம்: பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து.

தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள குஷ்பு, முதலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் பதவி வகித்த நிலையில் பின்னர் பாஜகவில் இணைந்து தற்போது அக்கட்சியில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் இவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேசிய பெண்களுக்கான ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பாஜக சார்பில் குஷ்புவுக்கு வாழ்த்துகள். பெண்களின் உரிமைகளுக்கான அவரது விடாமுயற்சி மற்றும் போராட்டத்திற்கான அங்கீகாரம் இது’ என்று பதிவிட்டுள்ளார்.அதோடு, பாஜகவினர் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Share this post with your friends