பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு முன்பாக உத்தவ் தாக்கரே பேசியதாக சிவசேனாவின் கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், உத்தவ் தாக்கரே, ஆம் ஆத்மி கட்சியும், சந்திர சேகரராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரீய சமிதியும் தேசிய அளவிலான நோக்கங்களைக் கொண்டுள்ளன என்றாலும் அது மறைமுகமாக பிரதமர் மோடிக்கும், சர்வாதிகாரத்துக்கும் உதவி செய்யும். இந்த இரண்டு கட்சிகளும் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் பல்வேறு மாநிலங்களில் நேரடியாக போட்டியிடுகின்றன. கேஆர்எஸின் பாரத் ராஷ்டிரீய சமிதி கட்சி மகாராஷ்டிராவில் கால்பதிக்கும் நோக்கத்துடன் பல்வேறு பேரணிகளை நடத்துகின்றன.2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரும் ஜனநாயகம் பிழைக்க வேண்டுமென்றால், தலைவர்கள் தேசநலனுக்காக தாராள மனதுடன் செயல்பட வேண்டும். அப்படி அனைவரும் ஒன்றிணைந்தால், வாக்காளர்களிடம் புது நம்பிக்கை வெளிப்படும். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More