சென்னையிலிருந்து வாரம் 6 முறை அதாவது வியாழக்கிழமை தவிர மதுரைக்கு தேஜஸ் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து மதுரைக்கு சுமார் 6 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.இந்நிலையில், இன்று முதல் சோதனை அடிப்படையில் தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே வாரியம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, சென்னை எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 22671) காலை 6.25 மணிக்கு தாம்பரம் சென்றடையும். பின்னர் தாம்பரத்திலிருந்து காலை 6.27 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பகல் 12.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 22672) இரவு 8.38 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.,பின்னர் தாம்பரத்திலிருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்தச் சேவையை மத்திய இணை அமைச்சர் முருகன் இன்று தாம்பரத்திலிருந்து கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.

எச்சரிக்கையை மீறி துப்பாக்கி சுடும் பயிற்சியில் யானைகள் பலி:வருத்தம் தெரிவித்த ராணுவம்.
மேற்கு வங்காளத்தில் சுக்மா பகுதியில் கடந்த 13 மற்றும் 14 ஆகிய நாட்களில்...
Read More