2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன்,காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இடதுசாரி கட்சிகள் சார்பில் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். அதோடு, உத்தவ்தாக்கரே, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, டி.ராஜா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் இல்லத்தில் 16 கட்சிகளின் தலைவர்கள் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.ஆலோசனையின் முடிவில், வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒற்றுமையுடன் எதிர்கொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More