உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சமநிலையை மீட்டெடுத்துள்ளது.
தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தேர்தல் பத்திரம் செல்லாது. பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் வினியோகிப்பதை உடனடியான நிறுத்த வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்நிலையில், தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,” தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதே” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,” உச்சநீதிமன்ற தீர்ப்ப, தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும். இந்த தீர்ப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனநாயக சமநிலையை மீட்டெடுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.