Mnadu News

தொங்கு பாலம் விபத்து: நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு நதி மீதுள்ள 230 மீட்டர் நீள தொங்கு பாலம் நேற்று மாலை 6.30 மணியளவில் அறுந்து விழுந்த கோர விபத்தில் ஆற்றில் இருந்து 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, காணாமல் போன பலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. முப்படைகள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் 15 மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விபத்திற்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் நாளை குஜராத் மோர்பி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends