நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. மேலும் நீலகிரியில் மின்வாரியம் கட்டுப்பாட்டில், உள்ள பைக்காரா அணை, அப்பர்பவானி அணை, போர்த்திமந்து அணை, அவலாஞ்சி அணை, உள்ளிட்ட 13 அணைகளிலும் தற்போது 90 சதவீதம் வரை தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி நிரம்பும் பட்சத்தில் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு எங்கே உள்ளது சொல்லுங்க? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
Read More