Mnadu News

தொண்டனின் உழைப்பால் உருவான தேர்தல் அறிக்கை: தேசிய தலைவர் ஜே.பி நாட்டா பெருமிதம்.

கர்நாடகத்துக்கான தேர்தல் அறிக்கை ஏசி அறையில் அமர்ந்து வகுக்கப்படவில்லை,மாறாக,ஒவ்வொரு தொண்டனும், மாநிலத்தின் மூலை முடுக்கிற்குச் சென்று மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அதனை களைவதற்கான அம்சங்களுடன் இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.அதே சமயம், பெங்களூருவை அடுத்த தலைமுறைக்கான ‘மாநில தலைநகர் மண்டலம்’ என்று அறிவித்து,விரிவான,தொழில்நுட்பம் சார்ந்த நகராக மேம்பாட்டுத்தும் திட்டத்தை செயல்படுத்துவோம். அதே நேரம்,எளிமையான ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியுடன் கூடிய பெங்களூருவை உலகளாவிய டிஜிட்டல் மையமாக மாற்றுவோம், என்று பேசியுள்ளார்.

Share this post with your friends