தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடியில் உள்ள மீனவர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கடற்கரை அருகில் உள்ள தெர்மல் பவர் பிளாண்ட், அனல் மின் நிலையம் ஆகிய தொழிற்சாலை சாம்பல் கழிவுகள் கடலில் கலப்பதினால் மீன், நண்டு, இறால் ஆகியவைகள் இறந்து விடுகிறது என்றும் இதனால் மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் தென்பக்கம் நாட்டு படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆல்பன் தெரிவித்தார் .

மேலும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.