18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எப்எம் டிரான்ஸ் மீட்டர்களை துவக்கி வைத்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சரியான நேரத்தில் தகவல்களை அளிக்கவும், விவசாயத்திற்கான முன்னறிவிப்புகள், மகளிர் சுய உதவிகுழுக்களை புதிய சந்தைகளுடன் இணைப்பதில் இந்த எப்எம் டிரான்ஸ்மீட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கும். அதே நேரம், தொழில்நுட்பத்தினை அனைவரும் பயன்படுத்தும் வகையில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இது,அனைத்து குடிமகன்களும் பயன்படுத்தவும்,எளிதில் அணுகும் வகையிலும் இருக்க வேண்டும்.அதே நேரம், மொபைல் சாதனங்கள் மற்றும் டேடா திட்டங்கள் எளிதில் கிடைப்பதன் மூலம் தகவல்கள் அனைத்து இடங்களுக்கும் பரவுகிறது.அதே சமயம்,ஆன்லைன் எப்எம்கள், புதிய வகையில் உருவெடுத்துள்ளன.இது டிஜிட்டல் இந்தியாவுக்கு புதிய பார்வையாளர்களை அளித்துள்ளது.அத்துடன் டிடிஎச் சேவை மூலம் பல படிப்புகள் கிடைக்கின்றன.அதோடு,எப்எம் ரேடியா மற்றும் டிடிஎச் ஆகியவை எதிர்கால டிஜிட்டல் இந்தியாவிற்கான புதிய கதவுகளை திறந்துள்ளது.சில நாட்களுக்கு பிறகு, ரேடியோவில், ‛மன்கி பாத்’தின் 100வது நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளேன். மன்கி பாத் நிகழ்ச்சியின் அனுபவம் மற்றும் மக்களுடனான தொடர்பு ஆகியவை ரேடியோ மூலம் மட்டுமே சாத்தியம் ஆனது. இதன் மூலம் நாட்டு மக்களின் பலம் மற்றும் கடமையுடன் இணைந்துள்ளேன். என்று பிரதமர் மோடி பேசி உள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More